துயர் பகிர்வு - More
-
திருமதி ரஞ்சினி வரதராஜா United Kingdom -
திருமதி மார்க்கண்டு சொர்ணலட்சுமி Sri Lanka -
திருமதி மகேஸ்வரி கணபதிப்பிள்ளை Canada -
திரு கைலாசபிள்ளை தர்மரட்ணம் United Kingdom -
திரு கந்தையா தாமோதரம்பிள்ளை Markham -
திரு நல்லையா துரைராசா Toronto -
திரு ஐயாத்துரை அருளம்பலம் Germany -
திருமதி பவதாரணி தவஈசன் United Kingdom -
அமரர் தங்கராஜா சாந்தகுமார் France -
திரு குமாரசூரியர் ஜெயந்தன் Canada
Click More Thuirpakirvu

1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
இலங்கை
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் இது தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பெரும் அநீதி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலை மாணவர்களை உதவியற்றவர்களாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் இந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவரத் தயாராகி வந்த நிலையில், அந்த நேரத்தில், தற்போதைய அரசாங்கம் இதைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம், கீழ்நிலை உயர்தரப் பிரிவுகளை மூடிவிட்டு, அவற்றை ஏனைய பாடசாலைகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தற்போது தயாராகி வருகிறது. இது சாதாரண தரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்தரம் பரீட்சை எழுதும் அபாயத்தையும் உருவாக்குகிறது என்றும் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அந்தப் பாடத்திற்கு ஏற்ற ஆசிரியர்களை வழங்குவதும், வசதிகளை வழங்குவதுமே தவிர, அந்தப் பிரிவுகளை மூடுவது இவற்றுக்கு தீர்வாக அமையாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.