• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்று முதல் அமுலாகும் புதிய எரிபொருள் விலை

இலங்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் வகையான இரு பெற்றோல்களும் ஒரு லீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட விலைகள் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் CPC கூறியுள்ளது.

    92 ஒக்டேன் பெற்றோல் – புதிய விலை 299 ரூபா
    95 ஒக்டேன் பெற்றோல் – புதிய விலை 361 ரூபா

இந்த விலை குறைப்புக்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப திருத்தியமைத்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
ஏனைய அனைத்து விலைகளும் மாறாமல் இருக்கும்
 

Leave a Reply