• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மூளைக்கும், மனசுக்கும் Filter-ஏ இல்லாதவரு கார்த்தி - சர்தார் 2 நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

சினிமா

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கதைக்களம் ஜப்பானில் நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எஸ்.ஜே சூர்யா பிளாக் டாகர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவிற்கு அச்சம்மிக்க ஒரு போர் நடைப்பெற இருக்கிறது அதை தடுக்கும் முயற்சியில் சர்தார் ஈடுப்படுவது போல காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைப்பெற்ற முன்னோட்ட வீடியோ வெளியீட்டு விழாவில் படக்குழு கலந்துக் கொண்டனர். அதில் எஸ்.ஜே சூர்யா " பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. எனக்கு சர்தார் படத்தின் முதல் பாகம் மிகவும் பிடித்து இருந்தது. என்னை இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைக்கும் போது . இரண்டாம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் எனக்குள் ஆர்வம் இருந்தது. எனக்கு மித்ரன் சார் கதை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

ஹாலிவுட் தரத்தில் உள்ள ஸ்பை படத்தை நம்மூர் மக்களுக்கு புரியும் படி சர்தார் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். தயவு செய்து இப்படத்தை நேரடி இந்தி ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் மிகவும் ரசித்து நடித்தேன் இந்த படத்தில். கார்த்தி சாரோட பிளஸ் வந்து மூளைக்கும் மனசுக்கும் ஃபில்டரே இல்லாத ஒரு மனுஷன்" என கூறினார்.
 

Leave a Reply