• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்புரான் சர்ச்சை - என் மகன் பலிகடா ஆக்கப்படுகிறார் - பிரித்விராஜின் தாயார் ஆதங்கம்

சினிமா

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்த்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்த்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பை அடுத்து, எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்பட்டது.இதனிடையே , எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக இயக்குனர் பிரித்விராஜை ஆதரித்து அவரது தாயார் மல்லிகா பேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

எம்புரான் திரைப்படம் பலரின் கூட்டுமுயற்சியால் உருவாகியிருந்தாலும் இப்படம் தொடர்பான சர்ச்சையில் தனது மகன் மட்டும் பலிகடா அளிக்கப்படுவதாக பிரித்விராஜின் தாயார் ஆதங்கத்துடன் இப்பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், "எம்புரான் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தையும் மோகன்லால் நன்றாகவே அறிவார். ஆகவே சர்ச்சியுரிய காட்சிகளுக்கு தனது மகனை மட்டும் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply