• Welcome to TamilsGuide
செய்திகள் 1

HIV தொற்றுக்குள்ளான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

நாட்டில் HIV தொற்றுக்குள்ளான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக  எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடம் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 824 ஆக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் HIV  தொற்று அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய STD  மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply