
வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் - 06 வயது சிறுவன் உயிரிழப்பு
இலங்கை
களுத்துறை தெற்கில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பெற்ரோல் குண்டு தாக்குதலில் 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
சனிக்கிழமை இரவு (மார்ச் 29) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது பெற்ரோல் குண்டை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் வீட்டினுள் இருந்த 28 வயதுடைய ஒரு பெண்ணும் 06 வயதுடைய ஒரு சிறுவனும் காயமடைந்தனர்.
சிறுவனம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.