
O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்
இலங்கை
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டில் சுமார் 15,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.