
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குச் சேகரிக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது- நாமல்
இலங்கை
”மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குச் சேகரிக்க வேண்டிய தேவை தமக்குக் கிடையாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
கரந்தெனிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது பொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இன்றும் எம்மிடம் வேலைத்திட்டங்கள் உள்ளன எனவும், அந்த வேலைத்திட்டங்களை முன்னிலைப்படுத்தியே தாம் மக்களிடம் வாக்கு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசியாவின் ஆச்சரியம் என இலங்கையை மாற்றுவதே தமது கொள்கையாகும் எனவும், தமது கட்சியிலிருந்து விலகிச் சென்ற பலர் தற்போது மீண்டும் தம்முடன் இணைந்துள்ளனர் எனவும் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.