
வீர தீர சூரன் Part 1 & 3 கண்டிப்பா எடுப்போம் - சீயான் விக்ரம்
சினிமா
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
திரைப்படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. நாளுக்கு நாள் முன்பதிவுகள் அதிகரித்து வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் தமிழ்நடு முழுக்க உள்ள திரையரங்களுக்கு படக்குழு நேரில் சென்று படத்தின் ஆதரவை பார்க்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான நிலையில் முதல் பாகமும் மூன்றாம் பாகமும் கண்டிப்பாக எடுப்போம் என சீயான் விக்ரம் சமீபத்தில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.