
எம்புரான் சர்ச்சை - நடிகர் மோகன்லால் வருத்தம்
சினிமா
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.
எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துத்த்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்த்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பை அடுத்து, எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்து நடிகர் மோகன்லால் தாவது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்கள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன்.
ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை.
எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் எம்புரான் குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம், மேலும் அந்தப் பொறுப்பு இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்கிறோம். படத்திலிருந்து இதுபோன்ற காட்சிகளை கட்டாயமாக நீக்க முடிவு செய்துள்ளோம்.
கடந்த நான்கு தசாப்தங்களாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதை விட மோகன்லால் யாரும் இல்லை என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.