
பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு
இலங்கை
புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31.03.2025 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (01.04.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் அறிவித்துள்ளார்.
அதற்கான பதில் பாடசாலையானது 05.04.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறுமெனவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.