• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை

இலங்கை

நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல்  வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில்  ‘ரஜலுணு’ என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி சனிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பிரகாரம் ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் ஐயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என  கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது ‘ராஜ லுணு’ எனும் பெயர் இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்ட பெயராகும் எனவும், எனவே, இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் மக்களைக் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தொழிற்சாலையில் , சந்தைப்படுத்தல் பணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கும்போது அதன் பெயர் நிச்சயமாக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply