• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முட்டையின் விலையை உயர்த்துமாறு கோரிக்கை

இலங்கை

அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் முட்டையின் விலையைக் குறைந்தபட்சம் 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply