
மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை
இலங்கை
மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த அனர்த்தத்தில் காணாமல் போன மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களை பாதுகாக்க உரிய தரப்புகளுக்கு இயலுமை கிட்டட்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இம்மக்களுக்கு இயன்ற அதிகபட்ச உதவிகளையும், நிவாரணங்களையும், அவசர மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையும் பெற்றுக் கொடுக்குமாறு உலகின் செல்வந்த நாடுகளிடம் தான் கேட்டுக்கொள்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.