• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு

இலங்கை

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி  முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ்  நாளை(31)  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply