• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒண்டாரியோ மாகாணத்திற்கு அடுத்தடுத்து கிடைக்கும் அதிர்ஸ்டம்

கனடா

இந்த ஆண்டில் ஒண்டாரியோ மாகாணத்திற்கு நான்காவது முறையாக தொடர்ச்சியாக லாட்டோ மேக்ஸ் (Lotto Max) ஜாக்பாட் வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த முறை $65 மில்லியன் டாலர் பரிசு நியூமார்கெட்டில் (Newmarket) விற்பனை செய்யப்பட்ட ஒரு டிக்கெட்டிற்கு போயுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒண்டாரியோ லாட்டரி & கேமிங் கமிஷன் (OLG) வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற சீட்டிலுப்பில் இந்த வெற்றி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது டிக்கெட்டுகளை உடனடியாக சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது 2024ம் ஆண்டில் ஒண்டாரியோவில் விற்பனை செய்யப்பட்ட நான்காவது மிகப்பெரிய லாட்டோ மேக்ஸ் வெற்றி கிடைக்கப் பெற்ற லொத்தர் சீட்டு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஜனவரி 21: எடோபிக்கோவில் 60 மில்லியன் டொலர் ஜனவரி 31: வில்லோடேலில் 25 மில்லியன் டொலர் பெப்ரவரி 21: ஓஷாவாவில் 40 மில்லியன் டொலர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒண்டாரியோவில் சாதனை முறிக்கும் லாட்டோ மேக்ஸ் வெற்றி 2024ம் ஆண்டில் மட்டும், 11 மொத்த Jackpot வெற்றி கிடைக்கப்பெற்றள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்:

 2009 முதல் இன்று வரை, ஒண்டாரியோவில் லாட்டோ மேக்ஸ் மூலம் 9 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பரிசுகள் வெல்லப்பட்டுள்ளன.

இது 115 ஜக்பொட் Jackpot வெற்றிகளையும், 937 மெக்ஸ்மில்லியன்ஸ் Maxmillions பரிசுகளையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply