• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் 3 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கனடா

கடந்த ஆண்டு ஒண்டாரியோ மாகாணாத்தின் மூன்று நகரங்களில் மூவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட சப்ரினா கால்தார் (30), தற்போது வழக்கு எதிர்கொள்ளுவதற்காக மனநிலையுடன் இல்லை என டொரண்டோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதனால், அவர் 60 நாட்கள் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட கால்தார் மீது, மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த பெண் தற்போது வழக்கை எதிர்கொள்ள தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மீண்டும் மதிப்பீடு செய்யும் முன் 60 நாட்கள் மனநல சிகிச்சை பெற வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒண்டாரியோ நீதிமன்றம், சட்டத்தரணி தரப்பின் கோரிக்கைக்கு இணங்க, குற்றவாளியின் மனநிலை ஆராய்வதற்காக மதிப்பீட்டுக்குத் தீர்மானம் செய்தது.

ஆரம்பத்தில் பாதுகாப்பு தரப்பு இதை கோரியிருந்த போதிலும், பின்னர் கால்தாரின் ஆலோசனைக்கேற்ப அதனை விலக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Leave a Reply