
சிகிச்சை என்ற பெயரில் கைதிக்கு பாலியல் துன்புறுத்தல் - பெண் பிசியோதெரபிஸ்ட் கைது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஸ்டேட்டன் ஐலேண்ட் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், அடைக்கப்பட்ட 21 வயது கைதி ஒருவர், பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வரும் பெண் பிசியோதெரபிஸ்ட்டுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
அந்த சிறுவன், 2021 ஆண்டு, புரூக்வுட் வாலிபர்களுக்கான மையம் என்ற பெயரிலான இந்த காவல் மையத்திற்கு 17 வயது சிறுவனாக இருக்கும்போது கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு பின்னர், குறித்த பெண் பிசியோதெரபிஸ்ட் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளார்.
இதுபற்றி அந்த சிறுவன் அளித்த புகாரில், இந்த பாலியல் துன்புறுத்தல் சில மாதங்களாக தொடர்ந்து நடந்தது. 30க்கும் மேற்பட்ட முறை கவுன்சிலிங் என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் பிசியோதெரபிஸ்ட் தன்னுடைய பதவியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி, தெரபி மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் ஒரு பகுதியே இது என கூறி சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
நியூயார்க் பொலிஸார் குறித்த பெண் பிசியோதெரபிஸ்டை கைது செய்து அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும், குற்றம் எதுவும் செய்யவில்லை என அவர் கூறியதால், அவர் விடுவிக்கப்பட்டபோதும் வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.