• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆழிக் குமாரன் ஆனந்தன்

இலங்கை

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தன் சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.
விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன்25 மே 1943 - பிறந்த இவர் 6 ஆகத்து 1984 இல் மரணமானார்
இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆகக் கடமை செய்தவர் . பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர். இவர் ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்
மோடார் சைக்கிள் ஓடுவதில் அலாதிப்ப்பிரியமானவர் .நடந்த விபத்தில் மண்ணீரல் அகற்ற வேண்டி ஏற்பட்டது
1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார்
ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார்.
அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார்.
அப்பொழுது கடல் நீர் மிகவும் தாழ் வெப்பநிலையில் இருந்தது .முறையான திட்டமிடலும் ,வழிகாட்டலும்
இல்லாமையால் குளிரினால் பாதிக்கப்பட்டு1984 ஆகத்து 6 ஆம் நாள் மரணமானார்
இவர் மனேல் ஐ லை கைப் பிடித்து ராஜேஷ் ராஜன் என்று இரு மைந்தர்களை வாரீசுக ளாக் கி னார் .
ஆனந்தனின் சாதனைகளை கின்னஸ் புத்தகத்தில் இருக்கிறது . இவற்றை தமிழில் புத்தகமாக வெளியிட்ட பெருமை அயல் ஊரில் பிறந்த திரு .ஈ.கே.இராஐகோபால் அவர்களைச் சாரும். அவர் அந்தப் புத்தகத்தை வெளியிடாமல் இருந்திருந்தால் ஆனந்தனின் சாதனைகள் தொடர்பான பதிவுகள் எவையும் தமிழில் இருந்திருக்காது.
எந்த ஒரு சம்பவமும் தோல்விகளின் பின் கிடைக்கும் வெற்றியே பெறுமதியானது .
முதன் முதலாக அவர் பெற்ற தோல்வி தான் அவரின் வைராக்கியத்தை அதிகரித்து வாழ்வில் பிரகாசிக்க வைத்திருக்கிறது
அதாவது
ஆனந்தனுடைய முதலாவது நீச்சல் முயற்சி. வல்வை ரேவடிக் கடற்கரையில் மக்கள் கூட்டம் கரைபுரண்டது. ஊரிலுள்ள அத்தனை மக்களும் அங்கு கூடியிருந்தார்கள்
நீந்துவதற்கு முன்பு தொண்டமானாற்றிற்குச் சென்று முதலாவதாகப் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திரு.நவரத்தினசாமியைச் சந்தித்து கொண்டார் ஆனந்தன்
அந்த மாதத்தில் காலநிலையானது ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் நேரத்திற்கு நேரம் மாறும் சுபாவம் கொண்டதெனவும் அவர் அறிவுரை வழங்கி ஆனந்தனை வழியனுப்பி வைத்தார்.
ஆனந்தனை தொண்டைமானாற்றில் இருந்து நீச்சலை ஆரம்பிக்குமாறு பலர் கேட்டனர். அப்படிச் செய்தால் நீந்தும் தூரம் மூன்று மைல்களால் குறையும் என்பதே அவர்கள் கூறிய காரணம். ஆனால் ஆனந்தன் அதற்கு மறுத்துவிட்டார். தொண்டைமானாற்றில் இருந்து நீந்தினால் நவரத்தினசாமியுடன் போட்டியிடுவதைப் போலத் தோன்றும் எனவும், அதனால் அதனை தான் விரும்பவில்லை எனவும், அடுத்தது தான் பிறந்த ஊரில் இருந்தே நீச்சலை ஆரம்பிக்க விரும்புவதாகவும் ஆனந்தன் கூறிவிட்டார். அதனால் ரேவடிக் கடற்கரையில் இருந்தே நீச்சல் ஆரம்பமாகியது. அவருடைய உடம்பு பூராவும் கிறீஸ் பூசினார்கள்.
ஆனந்தன் நீரில் இறங்கி கழுத்தாழம் வரை நடந்து சென்றுவிட்டு நீந்த ஆரம்பித்தார். ஊரில் உள்ள அத்தனை வள்ளங்களும் கட்டுமரங்களும் அவரைச் சூழ்ந்து புறப்பட்டன. ஆனந்தனுக்கு இடைஞ்சல் செய்யாதவாறு சிறிய சிறிய தூரங்களுக்கு அவருடன் நீந்துவதற்கு பலர் ஆசைப்பட்டனர். அனுமதி வழங்கப்பட்டு நீச்சல் நிம்மதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்களது குழுவைச் சார்ந்த கதிர்காமர், இராமநாதன், சண்முகானந்தம் ஆகியோர் ஒரு கட்டுமரத்தில் ஆனந்தனைத் தொடர்ந்த வண்ணம் அவருக்கு நேரத்திற்கு நேரம் சிறிய புட்டிகளில் அடைக்கப்பட்ட brand’s essence of chicken என்னும் திராவகத்தை ஊட்டியவாறு மாறி மாறி அவருடன் இயன்றளவு தூரத்திற்கு நீந்திக்கொண்டிருந்தார்கள்.

திடீரென வானம் கறுக்கத்தொடங்கியது
ஒரு பதினைந்து நிமிடங்களுக்குள் வானம் முகில்களால் மூடிமறைக்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்தது, அலைகள் பத்தடி பதினைந்து அடிக்கு உயர்ந்து மோதியது. சற்று நேரத்தில் மழையும் கொட்டத் தொடங்கியது
கணிப்பதற்கு ஒரு நட்சத்திரம் கூட வானத்தில் தெரியவில்லை. அவர்களுக்கு வழிகாட்டிகளாக வந்த கடலோட்டிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஆனந்தனுக்கு இருபக்கங்களிலும் இரண்டு கட்டுமரங்கள் போய்க்கொண்டிருந்தன. ஒரு கட்டுமரத்தில் இருந்த டோச் லைற் அடித்த புயலினால் கடலுக்குள் விழுந்துவிட்டது. ஒரு டோச் லைற்றின் உதவியுடன் ஆனந்தனை கண்காணித்து வந்தார்கள். ஆனால் சற்று நேரத்தில் கட்டுமரம் சுழன்று அடித்ததினால் ஆனந்தனைத் தவறவிட்டுவிட்டார்கள். அந்த உயரமான அலைகளுக்குள் மத்தியில் கும்மிருட்டில் ஒரு தேங்காய் அளவிலான தலையை ஒரேயொரு டோச் லைட்டைக் கொண்டு தேடுவதில் உள்ள கஷ்டத்தை கொ ஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்
ஆனந்தனைக் காணவில்லை. தவறவிட்டு விட்டோம் தேடுங்கள் என அந்த இருட்டில் அவருடன் வந்த வள்ளங்களை நோக்கி கூக்குரலிட்டார்கள். இப்படி அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்களுடன் வந்த வள்ளமொன்று ஊருக்குத் திரும்பிப் போய் ஆனந்தனைக் காணவில்லை எனக் கூறிவிட்டனர்.கடற் கரையில் மக்கள் குவிந்தனர் ஊரே அல்லோல கல்லோலப்பட்டது
இதே நேரம் ஆனந்தன் தன நம்பிக்கையால் நீந்திகொண்டிருந்திருக்கிறார்
இரவு பூராவும் அடித்த புயலின் பின்னர் கிழக்கு வானம் ஒருவாறு வெளிக்கத் தொடங்கியது. ஆனந்தன் நீந்திக் கொண்டே இருந்தார். நன்றாக வெளித்த பின்புதான் ஆனந்தன் அணிந்திருந்த swimming goggles அவருடைய முகத்தில் இல்லை என்பதை கண்டார்கள். அடித்த கடலுடன் அது போய்விட்டது. கண்ணை மூடிக்கொண்டும் நீந்த முடியாது. அப்படி கண்களைத் திறந்து கொண்டு நீந்திய ஆனந்தனுடைய கண்களைக் கொவ்வைப் பழங்களைப் போலச் சிவக்கச் செய்திருந்தன. அத்துடன் கண்களும் வீங்கிக் காணப்பட்டன. அத்துடன் புயலிலும், காற்றிலும் அலையிலும் மழையிலும் இரவு வெகுநேரம் பிழையான திசையில் நீந்தியிருக்கலாம் என்னும் எண்ணமும் தோன்றியது. அவை எல்லாவற்றிற்கு மேலாக இரவு பூராவும் அடித்த புயலின் காரணமாக ஆனந்தன் பெருமளவு கடல் உப்பு நீர்குடித்தபடியால் வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டார் .
இதனால் சலனப்பட்ட நண்பர்கள் பலவந்தமாக தனுஷ் கோடியில் இருந்து அவரை இலங்கைக்கு கொண்டு வந்து விட்டார்கள் .
இப்படியாக பலவேதனைகளையும் சாதனையாக மாற்றி வெற்றிகண்டார்
பின்னாளில் இவரின் வெற்றியை மட்டுமே கண்டவர்கள், அவரின் முயற்சியின் சோகங்களை கூறுவதில்லை .
பின்னாளில் வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் (09.08.2019) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது
( 9 உலக சாதனகளை படைத்து 7 சாதனைகள் "கின்னஸ்"புத்தகத்தில் இடம் பிடித்தவர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த நீச்சல் வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்கு நீரிணையை ஓரே தடவையில் நீந்திக் கடந்தார் ஆனந்தன்.
1975-ல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தி சாதனை படைத்தார்)

 

ஆழக்குமரனின் உலக சாதனைகள்:

1- பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தது.(1971-ம் ஆண்டு)
2 - 128 மணி நேரம் தொடர்ச்சியாக "டிவிஸ்ட்"நடனம் ஆடியது(1978)
3 - 1487 மைல் தூரத்தை 187 மணி நேத்தில் இரு சக்கர வாகனத்தில் கடந்தது(1979)
4 - 33 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது.(1979)
5 - 136 மணி நேரம் பால் பனசிங் செய்தது.(1979)
6 - இரண்டு நிமிடத்தில் 165 தடவை site up செய்தது.
7 - 9100 தடவை high kicks செய்தது(1980)
8 - நடந்தே 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் கடந்தது.(1981)
9 - 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றது....
வல்வெட்டித்துறை மண்ணில் பிறந்த ஆழிக்குமரன் வல்வை ஆனந்தன் உலகத்தமிழினத்திற்கே பெருமை சேர்த்தவர்
ஆனந்தன் பத்து சகோதரர்களை தனக்கே துணையாக க் கொண்டவர் வீட்டிலே வைத்துப் பராமரிக்க முடியாதபடி ஒரே குழப்படி .துடியாட்டமானவர் .இதனால் பதின் மூன்று பாடசாலைகள் மாற்றப்பட்டார் .பிறக்கும் பொழுது கால் ஊனமானவர் .இந்த தாக்கத்தில் இருந்து மீண்டு ..தன்னம்பிக்கையே வாழ்வாகக் கண்டவர் .
பருத்தித் துறைக் ஹாட்லிக் கல்லூரியில் இருந்து குழப்படி காரணமாக வெளியேற்றப்பட்டார் .யாழ் மத்திய கல்லூரியில் சேர்ந்து அங்கிருந்து படித்து பல்கலைக் கழகம் புகுந்து .தனது சட்டப் படிப்புக்களை பூரணம் செய்தார் ,பேராதனைப் பல்கலை க் கழகத்தில் இருந்து துவிச் சக்கரவண்டி மூலம் வல்வெட்டித்துறைக்கு வந்து போவார் .அப்படி பிரயாசை மிக்க மனிதர்
மேலும் ஆனந்தனின் உயிர் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் .இவரின் நண்பர் குரே என்னும் சிங்கள நண்பன் நீச்சல் தடாக திறப்பு விழாவுக்கு தேடி வந்திருக்கிறார் அவ்வளவு பற்று மிக்கவர் .
இதை விட குத்த்ச்சண்டை வீரர் இவர் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க குத்துச் சண்டையையே கை விட்டவர் .
ஆழிக் குமரன்ஆனந்தனின் தங்கையார் குச்சுப்பிடிக் கலைஞர் இவர் முதலமைச்சர் ஜெயலலி தா அம்மையாரின் குருவானவர் .இவர் பிரபலமான ஜேர்மன் கலாசாற ஒ ன்றியத் தலைவரின் காதல் வலையில் சிக்கி தற்பொழுது அர்ஜென்டினா நாட்டில் குச்சுப்புடி பழக்கி வருகிறார் அங்கேயே வாழ்ந்து கொண்டு வருகிறார் ,
ஆழிக் குமரனின் மகன் இந்தியாவின் google நிறுவனப் பொறுப்பதிகாரியாக இருந்து பின்னர் ஆசியாவின் நிர்வாகத்தின் பொறுப்பு அ திகாரியாக் வளர்ந்து தற்பொழுது சிறந்த ஒரு இடத்தில் இருக்கிறார் .
மேலும் கட்டுரை நீள்வதால் சிறு குறிப்பை தருகிறேன்
வல்வெட்டித்துறைக்கும் கேரளாவுக்கும் நிறைய தொடர்புகள் இருந்து வந்துள்ளது ,இங்கு கப்பல் கட்டும் தொழில் சிறப்புடையது ,பிரிட் டிசார் ஆண்ட பொழுது வல்வெட்டியில் இருந்து அமெரிக்காவுக்கு பாய்மரக் கப்பல் அண்ணா பூரணி என்னும் பெயரில் போஸ்டன் நகருக்கு சென்றடைந்தது .இப்படிப்பட்ட வல் வேட்டி மக்களின் பெருமைக்கு அத்தியாயமானவர் ஆனந்தன் .

Manikkavasagar Vaitialingam
 

Leave a Reply