
39 மனைவிகள், 94 குழந்தைகள் - உலகிலேயே பெரிய குடும்பம்
இந்தியா
இந்தியர் ஒருவர் 39 முறை திருமணம் செய்து, 94 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உருவாக்கியவர் மிசோரமைச் சேர்ந்த சியோனா சனா. 39 முறை திருமணம் செய்து கொண்டுள்ளதோடு, 94 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். 36 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
இவரது குடும்பத்திற்கு சொந்தமான நூறு அறைகள் கொண்ட ஒரு பரந்த மாளிகை உள்ளது. இந்த 4 மாடி கட்டிடம் "புதிய தலைமுறை வீடு" என்று பொருள்படும், "சுவான் தார் ரன்" என்று குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனி படுக்கை வசதிகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும், குழந்தைகளை வளர்ப்பதற்கும் பொதுவான இடங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். தினசரி உணவு தொழிற்சாலைக்கு நிகரான அளவில் தயாரிக்கப்படுகிறது.
அவரது வீட்டை ஒரு சுற்றுலா தலமாக மாற்றியுள்ளார். இங்கு பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். 1945ல் பிறந்த சியோனா, பலதார மணத்தை கடைப்பிடித்து, பெரிய குடும்பங்கள் மூலம் தங்கள் மத சமூகத்தை விரிவுபடுத்துவதில் நம்பிக்கை கொண்ட ஒரு கிறிஸ்தவ பிரிவான சானா பவுலின் தலைவராக இருந்துள்ளார்.
17 வயதில் முதல் திருமணம் செய்துள்ளார். 2021-ல் சியோனா காலமாகியுள்ளார். இருப்பினும், அவரது குடும்பம் இன்றும் ஒற்றுமையுடன் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.