• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமுத்திரகனியின் பைலா படத்தில் இலங்கை நடிகை

இலங்கை

தயாரிப்பாளர் ராசய்யா கண்ணனின், சமுத்திரகனியில் பைலா படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார்.

பைலா படத்தில் ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என். இளங்கோ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். காதலன் படம் சூப்பர் ஹிட் ஆனதும், ‘நடனப் புயல்’ பிரபுதேவாவைத் தேடி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் வந்தன.

அப்போது அவர் ஒத்துக்கொண்ட படங்களில் ஒன்று ‘ராசய்யா’. பிரபுதேவா ஜோடியாக ரோஜா நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தை இயக்கியவர் பி. கண்ணன்.

இந்நிலையில் ‘ராசய்யா’ படத்தை இயக்கிய டைரக்டர் ‘ராசய்யா கண்ணன்’ என்றே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறார். பி. கண்ணன் ‘கலா தியேட்டர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த நிறுவனம் மூலம் ‘கதையல்ல நிஜம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இதன் தொடர்ச்சியாக தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு சூட்டியுள்ளார்.

கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார். ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என். இளங்கோ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘

சேஸிங்’ படத்தை இயக்கிய கே.வீரக்குமார் இந்தப் படத்துக்கு கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார். ‘அய்யோ சாமி..’ ஆல்பம் புகழ் சனுகா இசையமைக்கிறார்.  
 

Leave a Reply