
அமெரிக்க கனடா உறவுகளில் நிரந்தர விரிசல் ஏற்படும் - ஒலிவியா சௌ
அமெரிக்கா-கனடா அரசியல் உறவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா?" – உறுதியாக சொல்ல முடியாது" என டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். "அரசுகளுக்கு இடையே நம்பிக்கை இருக்கும் என்றே சொல்ல முடியாது. அதுதான் பயங்கரமான விஷயம்" எனத் தெரிவித்துள்ளார்.
டொராண்டோ நகரம் புதிய பொருளாதார திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளது. $8.8 மில்லியனுக்குள் உள்ள கட்டுமான ஒப்பந்தங்கள் – 100% கனடிய நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
$353,000க்கு குறைவான பொருட்கள், சேவைகள் – கனடிய நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். "நாம் எங்கள் சொந்த பொருட்களை தயாரித்து, நம்மையே நம்பும் சூழல் உருவாகும்," என சௌ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் முடிவுகள் எப்போது என்ன ஆகும் என்று கணிக்க முடியாது. நம்பிக்கையில்லாமல் உறவு எப்படி இருக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் உறவு முடிந்தாலும், கனடியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் உறவு தொடரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.