துயர் பகிர்வு - More
-
திரு நல்லையா துரைராசா Toronto -
திரு ஐயாத்துரை அருளம்பலம் Germany -
திருமதி பவதாரணி தவஈசன் United Kingdom -
அமரர் தங்கராஜா சாந்தகுமார் France -
திரு குமாரசூரியர் ஜெயந்தன் Canada -
திருமதி கோபு உதயரேகா Denmark -
திருமதி சுப்புலக்ஷ்மி வேலாயுதர் United Kingdom -
திருமதி அந்தோனிப்பிள்ளை மேரியோசேப்பினா Sri Lanka -
திரு வேலுப்பிள்ளை தில்லைநாதன் Mississauga -
திருமதி தேவி சிவஞானம் Italy
Click More Thuirpakirvu

மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி - அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து
இலங்கை
Share this article:
மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக்ஷ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதமும் விதித்தார்.
பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டார்.
இதன்போது, மதுவின் வாசனை அவர் மீது தொடர்ந்து இருந்ததால், பொலிஸார் அவரை மேலும் விசாரித்தனர், அப்போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார்.