
சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை
கடற்றொளில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திருகோணமலை மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.
அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மட்டங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அவர் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
விசேடமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் போரில் இந்தியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் குறித்து விசேட கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை உபயோகிப்பதன் ஊடாக எங்களது மீனவர்கள எமது கடல் வளங்களை நாசப்படுத்துகின்றனர். ஆகையால் சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது என்றும் அவ்வாறு எவரும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கத்தின் ஊடாக மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்