• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வர்த்தகப் போரின் எதிரொலி - ட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கனடாவின் புதிய பிரதமர்

கனடா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என உத்தரவிட்தன் காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் எக்றும் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக  கருத்துரைத்த ட்ரம்ப், "இது வளர்ச்சியைத் தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரி விதிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 03 திகதி அமலுக்கு வரும் நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக அடுத்த ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என்றும்  டிரம்ப் கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply