
நெதர்லாந்தில் பரபரப்பு- கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயம்
நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாமில் உள்ள டாம்ஸ்கொயர் என்ற இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி.
இந்நிலையில், இங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை திடீரென சரமாரி குத்தினார். இதில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலர் கத்திக்குத்தில் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் டாம்ஸ்கொயர் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், போலீசார் அவனை மடக்கிப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.