
விரைவில் பிரபாஸ் திருமணம்.. பொண்ணு யாரு தெரியுமா?
சினிமா
தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்புகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.
45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி படத்தில் நடிக்கும் போது, நடிகர் பிரபாசுக்கும். அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.
இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாசின் மாமாவும் மறைந்த அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜுவின் மனைவி சியாமளா தேவி, இந்த திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட்', 'கண்ணப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.