• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதி சம்பவம்-நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி அவர்கள் நேற்று கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்

இதேவேளை இது தொடர்பாக யோஷித ராஜபக்ஷ கடந்த 25 ஆம் திகதி கொம்பனி வீதி பொலிஸ்சாரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்ததுடன் இந்த மோதலில் சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டிருந்தார்

மேலும் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply