
வாயில் சுருட்டு - Peddi-ஆக களமிறங்கும் ராம் சரண் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்
சினிமா
ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ஆர்.சி. 16 படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ஆர்.சி. 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராம் சரணின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ள படத்தின் போஸ்டரில் இந்தப் படத்திற்கு 'பெட்டி' என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராம் சரண் சுருட்டு பற்ற வைத்து மாஸாக காட்சியளிக்கிறார். இத்துடன் கையில் மட்டை ஒன்றை வைத்துக் கொண்டு நிற்கிறார். போஸ்டரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.