
அமெரிக்க தேர்தல் விதிகளில் மாற்றம் - புதிய உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். புதிய விதிமுறைகள் வாக்காளர்கள் வாக்கு செலுத்த என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், தேர்தல் நாளில் அனைவருக்கும் வாக்குச்சீட்டுகள் கிடைப்பது உறுதி செய்வது என பல விஷயங்களை மாற்றும் வகையில் உள்ளது.
இது தொடர்பாக அதிபர் கையெழுத்திட்டுள்ள உத்தரவில், தேர்தல் விவகாரங்களில் அமெரிக்கா அடிப்படை மற்றும் அத்தியாவசிய பாதுகாப்பை நடைமுறைப்படுத்த தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த உத்தரவு வாக்காளர் பட்டியலை பகிர்வதில் மாகாணங்கள் ஃபெடரல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளது.
புதிய உத்தரவை அமல்படுத்த மறுக்கும் மாகாணங்களுக்கு நிதி வழங்கப்படாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் தேர்தல் விதிமுறைகளை பொருத்தவரை மாகாணங்களுக்கு அதிகாரம் அதிகம் என்பதால், அதிபர் டிரம்ப் பிறப்பித்து இருக்கும் புதிய உத்தரவை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது.