• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

சினிமா

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

எம்புரான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் முன்பதிவு மட்டும் உலகமெங்கும் 58 கோடி ரூபாய்க்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தின் முதல் பாடலான ஃபிர் ஸிந்தா பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலி தீபக் தேவ் இசையில் தனிஷ் நபர் வரிகளில் ஆனந்த் பாஸ்கர் பாடியுள்ளார்.
 

Leave a Reply