• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசபந்துவுக்கு எதிராக பிரேரணை

இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகப் பிரேரணையொன்றை கொண்டுவர தேசிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், குறித்த பிரேரணை இன்று (25) பிற்பகல் 12.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் தேடுதலுக்கு பிறகு, தேசபந்து தென்னகோன் சமீபத்தில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து அவரை காவலில் எடுத்த பொலிஸார்  நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து, ஏப்ரல் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, தற்போது தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு எதிராகப் பிரேரனை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிபடத்தக்கது.
 

Leave a Reply