• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள்  இலங்கைக்குத் திரும்ப வேண்டும்!- வட மாகாண ஆளுநர்

இலங்கை

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள்  இலங்கைக்குத்  திரும்ப வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை  நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பாக  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கு உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவ்வாறு இந்தியாவில் இருந்து அழைத்து வரும் ஈழ அகதிகளுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
 

Leave a Reply