நயன்தாரா எடுத்த முடிவால் அறந்தாங்கி நிஷா எடுத்த அதிரடி முடிவு..
சினிமா
ரசிகர்கள் ஒரு பிரபலத்தை விரும்புவதும் பின் அவர்களுக்கு பட்டப் பெயர் வைப்பதும் வழக்கம் தான்.
அப்படி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலகநாயகன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, லேடி சூப்பர் ஸ்டார், புன்னகை அரசி என இப்படி நிறைய பிரபலங்களுக்கு பட்டப் பெயர்கள் உள்ளது.
ஆனால் இப்போதெல்லாம் பிரபலங்கள் பலர் தன்னை இனி பட்டப்பெயர் வைத்து அழைக்க வேண்டாம், என் பெயரை மட்டுமே அழையுங்கள் என கூறி வருகின்றனர்.
அண்மையில் நடிகை நயன்தாரா இனி என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கூறியிருந்தார்.
அவரது அறிவிப்பு வந்த பின் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் அறந்தாங்கி நிஷா என்னை இனி அந்த பட்டப் பெயர் வைத்து அழைக்க வேண்டாம் என காமெடியாக கூறியுள்ளார்.






















