அமெரிக்காவில் சி ஐ ஏ தலைமையகத்திற்கு முன் துப்பாக்கி பிரயோகம்
அமெரிக்காவில் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தலைமையகத்திற்கு வெளியே நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
வேர்ஜீனியா லாங்லேயில் உள்ள சிஐஏ அலுவலகத்திற்கு வெளியே நபர் ஒருவர் கோசங்களை எழுப்பிய பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பெருமளவு பொலிஸாரும் விசேட படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர். சி.ஐ.ஏ வளாகத்திற்கு செல்வதற்கான வீதிகள் மூடப்பட்டுள்ளன.





















