• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகே விபத்து - ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

மட்டக்களப்பு  கல்லடிப்பாலம் அருகில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச பேருந்துடன்  மோட்டார் சைக்கிளொன்று மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ் விபத்தில்  மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் சிறு காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் பின்னால் இருந்து சென்றவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்  மூன்று பிள்ளைகளின் தந்தையான மெளலவி எம்.எஸ்.எம். ஸபீர் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply