எண்ணெய் குழாயில் கோளாறு - CPC தகவல்
இலங்கை
கொழும்பு துறைமுகத்தையும் கொலன்னாவையில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனையத்தையும் இணைக்கும் எண்ணெய் குழாய்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவலின்படி, எரிபொருள் பரிமாற்றப்படும் இரண்டு குழாய்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், மீதமுள்ள குழாய்வழியைப் பயன்படுத்தி போதுமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக CPC உறுதியளித்தது.























