• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

இலங்கை

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பதுளை மாவட்டம் பூனாகலை கபரகலை தோட்ட குடியிருப்புக்கள் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருட காலமாக பூனாகலை மாகந்த தேயிலை தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

கடந்த இரண்டு வருட காலமாக தேயிலை தொழிற்சாலையில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்கு நேற்று (2025/03/15) 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் K.V சமந்த வித்யாரத்ன பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில விஜயசேகர, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தகீர்த்தி, நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் தீப்தி குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி மஹகமகே. உட்பட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் மற்றும் பிரதேச செயலாளர் தோட்ட முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

10 பேர்ச் காணியுடன் இவ் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு வீட்டுக்கு சுமார் 28 லட்சம் செலவிடப்படவுள்ளதுடன் . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அளவில் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply