எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிப்பு
இலங்கை
மோசமான வானிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 12 கிலோ மீற்றர் கம்பத்துக்கு அருகில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தகொல்ல, எல்ல வெல்லவாய பிரதான வீதியின் 12 கிலோ மீற்றர் கம்பத்துக்கு அருகிலுள்ள வீதியில் நேற்று (13) மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், வீதியை சீரமைத்து சீரமைக்கும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி பயணிக்கும் போது பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும்.
மாற்று வழிகள்:
• எல்லயிலிருந்து வெல்லவாய நோக்கி பயணிக்கும் போது – பண்டாரவளையிலிருந்து அம்பதண்டேகம ஊடாக ஊவா கரந்தகொல்ல பிரதேசத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணிக்க முடியும்.
• வெல்லவாயவிலிருந்து எல்ல நோக்கி பயணிக்கும் போது – வெல்லவாய ஊவா கரந்தகொல்ல பிரதேசத்திலிருந்து அம்பதண்டேகம ஊடாக எல்ல நோக்கி பயணிக்க முடியும்.






















