• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொழில்நுட்ப சேவை வரி மூலம் 1,300 கோடி ரூபா வருமான இலக்கு

இலங்கை

இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 சதவீத வரி மூலம் 1,300 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் அதிகாரிகள் நிதிக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இது மொத்த தேசிய உற்பத்தியில் 0.04 சதவீதமாகும்.

இந்த வரியை 30 சதவீதமாக்குவதற்கு முன்னைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வரியை 15 வீதமாக குறைக்க முடிந்தது என குழுவில் இணைந்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply