ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழா
கனடா
ஈழநாடு பத்திரிகை வாசகர்களே! கலா ரசிகர்களே!
உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழா எதிர்வரும் 1 June 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும். நாட்டுப்பற்றாளர் மதிசூடி நினைவரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு
கலைமாமணி டாக்டர் நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களது இசைக் கச்சேரியும்
ஈழத்தின் சைவத் தமிழ்க் காவலர் - அறப்பணி அருளாளர் திரு ஆறுதிருமுருகன் அவர்கள் வேர்களைத் தேடுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகின்றார்.
இந்நிகழ்வு மூலம் சேகரிக்கப்படும் நிதி கனடா தமிழ் சமூக மையத்திற்கு ஈழநாடு வாசகர்கள் சார்பில் வழங்கப்படும்.
அன்பளிப்பு 100.00 டொலர்கள், 50.00 டொலர்கள், 25.00 டொலர்கள்.
ஆதரவை வழங்க விரும்புவோரும் விழாவில் கலந்து கொள்ள விரும்புவோரும் 416 841 9600 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
என் இனிய உறவுகளே! ஓர் உயர்வான நோக்கத்திற்காகவும் - கனடிய மண்ணில் எமது அடையாளத்துக்காகவும் நடாத்தப்படும் இந்நிகழ்வு தொடர்பாக இத்தகவலை உங்கள் முகநூல் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நன்றி























