• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எவ்ளோ பௌலிங் போட்டாலும் ஸ்டம்ப் கீழ விழமாட்டிங்குது - பெருசு படத்தின் நகைச்சுவை ப்ரோமோ

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தற்பொழுது சூர்யாவின் 45 திரைப்படமான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி நடைப்பெறவுள்ளது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படக்குழு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வைபவ், சுனில், நிஹாரிகா, ரெடின் கிங்ஸ்லி இடம் பெற்றுள்ளனர். எவ்வளவு பந்துகள் போட்டாலும் ஸ்டம்ப் கீழே விழவில்லை என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.
 

Leave a Reply