• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்த விஷயங்களை சுய விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்டதில்லை - நடிகை இனியா

சினிமா

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை இனியா சமூக சேவை சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்த நிலையில், இனியா தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை இனியா, "அனைத்து மகளிருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள். பெண்களை ஊக்குவிக்கும் ஆண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் ஜியோ இந்தியா ஃபவுன்டேஷன் உடன் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறேன்."

"சினிமாவைத் தொடர்ந்து நம்மால் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும் என்றால் ஏன் அதை செய்யக்கூடாது என்று நினைத்தேன். இங்கு பெண்கள் மெழுகுவர்த்தி, சோப் உள்ளிட்டவைகளை தயாரிப்பதாக கூறினார்கள். இதை இன்னும் வித்தியாசமாக செய்வது எப்படி என்றும் கேட்டார்கள்."

"சமூகம் சார்ந்த பணிகள், மற்றவர்களுக்கு உதவியாக இருப்பது போன்றவற்றை நான் வெளியில் தெரியவோ அல்லது என் சுய விளம்பரத்திற்காகவோ பயன்படுத்திக் கொண்டது கிடையாது. ஆனாலும், நான் திரைத்துறையை சார்ந்திருப்பதால் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தானாக செய்தியாகி விடுகின்றன," என்று தெரிவித்தார்.

Leave a Reply