• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாதம்பை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்

இலங்கை

மாதம்பை, கலஹிடியாவ பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று லொறி மற்றும் பேருந்துடன் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அதேநேரம், இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32, 36 வயதுடைய இரு பெண்களும், ஒரு வயது குழந்தையுமே விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் மினுவங்கொடை மற்றும் ராகமவைச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட இரண்டு ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவில் புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்து தொடர்பில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply