தனுஷ் 55 - வது படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட பதிவு.. வேற லெவல்
சினிமா
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். நடிகராக இருந்து இயக்குநராக உயர்ந்த தனுஷ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது.
அதை தொடர்ந்து இட்லி கடை என்ற திரைப்படம் உருவாகி வருகின்றன. தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 - ம் தேதி வெளிவர உள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர்.
அடுத்து அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் அவரது 55 - வது படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், இயக்குநர் அவரது ட்விட்டர் தளத்தில் தனுஷின் 55வது படத்திற்கான பூஜை நடத்தப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு "மகாசிவராத்திரியில் சிவபெருமானின் அருளைப் பெற்று அனைவரும் அமைதியுடனும் பாசிட்டிவ் எனர்ஜுயுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
























