
கொழும்பில் காணியின் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக, 2024 இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவானது.
காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்து, முறையே 9.9 சதவீதம், 9.4 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன.
அரையாண்டு அடிப்படையில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2024 இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2024 இன் இரண்டாம் அரையாண்டுக் காலப்பகுதியில் மெதுவான வேகத்தில் அதிகரித்தன.
அதிகூடிய அதிகரிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியில் அவதானிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக்; குறிகாட்டிகள் காணப்பட்டன.