
ஆரவாரமா ஆரம்பிக்கிறோம்.. குட் பேட் அக்லி போஸ்டர் பகிர்ந்த ஜி.வி. பிரகாஷ்
சினிமா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். 1 நிமிடம் 34 வினாடிகள் இந்த டீசரின் நீளம் அமைந்துள்ளது. இந்த டீசருக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், டீசர் வெளியீட்டை ஒட்டி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆரவாரமா ஆரம்பிக்கிறோம் இன்னைக்கு மாமே.. ஜி.பி.யு. உலகில் இன்னைக்கு நம்ம அடிஷன்.. யுனிவர்ஸ்-க்கு நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.