• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று

இலங்கை

ஹிஜ்ரி 1446 புனித ரமழான்  மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு  இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இப்பிறை தொடர்பான விடயங்கள் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி , ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள்,  மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் எப்பிரதேசத்திலாவது ரமழான் மாத தலைபிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் மக்களை கேடுக்கொண்டுள்ளது .
 

Leave a Reply