• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் ஒருவர் கைது

சினிமா

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.

சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லீலாவதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

அவர் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும் பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதில், முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை கத்தியால் குதிய நபரை போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சந்தேகத்தின் பெயரில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கிலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a Reply