பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ள விஜய் சேதுபதி
சினிமா
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள 'பன் பட்டர் ஜாம்' திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இளம் தலைமுறையின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு நேற்று வெளியிட்டது. 'ஏதோ பேசத்தானே' என்ற பாடலின் வரிகளை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதி பாடலாசிரியராக அறிமுகமாகி உள்ளார். இப்பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையில் சித்தார்த் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ளனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.






















